மீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு:
ஆன்மீக சொற்பொழிவைக் கேட்க பலரும் வந்து குவிந்திருந்தனர்.
முகத்தில் எந்தவிதமான உணர்ச்சியோ, சங்கோஜமோ, வெட்கமோ, கூச்சமோ இல்லாமல், படு இயல்பாக காணப்பட்டார் நித்தியானந்தா.
இதில் யார் செய்தது தவறு?
- எந்த தவறு செய்தாலும் மீண்டும் பழைய நிலையில் வந்து அமரவைத்த நம் அரசியல் சட்டமா?
- யார் எக்கதியானால் என்ன? நம் கல்லா பெட்டி நிரம்பினால் போதும் என்று இருக்கும் அரசியல்வாதிகளா?
- எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தப்பாமல் தப்பு தாளங்கள் போடும் அரசு அதிகாரிகளா?
- நம் மக்களை ஆட்டு மந்தைகளாய் வைத்து இருக்கும் அரசியல்வாதிகளின் முதுகு எலும்புகளான பணக்கார வர்க்கமா?
- யார் எது பண்ணினாலும் உடனே மறந்து போகும் வியாதி கொண்ட நம் மக்களா?
என்னை பொறுத்தவரை எந்த தவறு நடந்தாலும் அடிமட்டத்தில் இருந்து சரி செய்யவேண்டும்.
அப்படி பார்த்தால் மக்களாகிய நாம் தான் முதலில் திருந்தவேண்டும்? அதுவும் உடனடியாக.
இல்லையென்றால் மற்றவரை சார்ந்தோ,மற்றவரிடம் கையேந்தியோ தான் இருக்க வேண்டும்.
எனக்கு என்ன கவலை நான் ஏன் மற்றவரை நம்பி இருக்க வேண்டும்,நான் நல்லா தானே இருக்கிறேன்,பக்கத்துக்கு வீட்டில் நடப்பது பற்றி எனக்கு என்ன கவலை என்று இருந்தால் உன் முகத்திலும் சாணம் விழும் நேரம் மிக விரைவில்.
டிஸ்கி
- இதே பட்டா எழுதி இருந்தால் இன்னும் காரம் அதிகமாக இருக்கும்
- யாரோ பண்ணும் தப்பிற்கு மக்கள் எப்படி காரணமாவர்கள் என்று நொண்ண பேச்சு பேசினால் பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பு அல்ல
- நித்தியானந்தா பேசி முடித்ததும் அவரது காலில் விழுந்து பயபக்தியுடன் ஆசி பெற்றார் மாளவிகா .
- மிஸ்டர் லெனின் சீக்கிரம் ரெடியா இருங்க , உங்க காமெராவுக்கு வேலை வந்துடுச்சு