நாம் எங்கே செல்கிறோம்?மீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு:ஆன்மீக சொற்பொழிவைக் கேட்க பலரும் வந்து குவிந்திருந்தனர்.


முகத்தில் எந்தவிதமான உணர்ச்சியோ, சங்கோஜமோ, வெட்கமோ, கூச்சமோ இல்லாமல், படு இயல்பாக காணப்பட்டார் நித்தியானந்தா.


இதில் யார் செய்தது தவறு?

  • எந்த தவறு செய்தாலும் மீண்டும் பழைய நிலையில் வந்து அமரவைத்த நம் அரசியல் சட்டமா?

  • யார் எக்கதியானால் என்ன? நம் கல்லா பெட்டி நிரம்பினால் போதும் என்று இருக்கும் அரசியல்வாதிகளா?


  • எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தப்பாமல் தப்பு தாளங்கள் போடும் அரசு அதிகாரிகளா?

  • நம் மக்களை ஆட்டு மந்தைகளாய் வைத்து இருக்கும் அரசியல்வாதிகளின் முதுகு எலும்புகளான பணக்கார வர்க்கமா?

  • யார் எது பண்ணினாலும் உடனே மறந்து போகும் வியாதி கொண்ட நம் மக்களா?

என்னை பொறுத்தவரை எந்த தவறு நடந்தாலும் அடிமட்டத்தில் இருந்து சரி செய்யவேண்டும்.

அப்படி பார்த்தால் மக்களாகிய நாம் தான் முதலில் திருந்தவேண்டும்? அதுவும் உடனடியாக.

இல்லையென்றால் மற்றவரை சார்ந்தோ,மற்றவரிடம் கையேந்தியோ தான் இருக்க வேண்டும்.

எனக்கு என்ன கவலை நான் ஏன் மற்றவரை நம்பி இருக்க வேண்டும்,நான் நல்லா தானே இருக்கிறேன்,பக்கத்துக்கு வீட்டில் நடப்பது பற்றி எனக்கு என்ன கவலை என்று இருந்தால் உன் முகத்திலும் சாணம் விழும் நேரம் மிக விரைவில்.


டிஸ்கி
  • இதே பட்டா எழுதி இருந்தால் இன்னும் காரம் அதிகமாக இருக்கும்
  • யாரோ பண்ணும் தப்பிற்கு மக்கள் எப்படி காரணமாவர்கள் என்று நொண்ண பேச்சு பேசினால் பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பு அல்ல
  • நித்தியானந்தா பேசி முடித்ததும் அவரது காலில் விழுந்து பயபக்தியுடன் ஆசி பெற்றார் மாளவிகா .
  • மிஸ்டர் லெனின் சீக்கிரம் ரெடியா இருங்க , உங்க காமெராவுக்கு வேலை வந்துடுச்சு


37 comments:

Jey said...

///ஆன்மீக சொற்பொழிவைக் கேட்க பலரும் வந்து குவிந்திருந்தனர்.///

அந்த பலர்ல, பலர் செம ஃபிகருங்க!!! , அத விட்டிட்டியே , முத்து...

Jey said...

///முகத்தில் எந்தவிதமான உணர்ச்சியோ, சங்கோஜமோ, வெட்கமோ, கூச்சமோ இல்லாமல், படு இயல்பாக காணப்பட்டார் நித்தியானந்தா.////

ஹஹா ஹஹா ஹஹா, இதுகெல்லாம் அசந்தா தொழில் பண்ண முடியுமா பாஸ்?

முத்து said...

Jey said...

அந்த பலர்ல, பலர் செம ஃபிகருங்க!!! , அத விட்டிட்டியே , முத்து...///////////


அதுக்கு தானே சொற்பொழிவை வைச்சது

Jey said...

///எந்த தவறு செய்தாலும் மீண்டும் பழைய நிலையில் வந்து அமரவைத்த நம் அரசியல் சட்டமா? ///

அரசியல் சட்டத்தை யார் கிட்டயோ அடமானம் வச்சிட்டாங்களாம், மீட்டுனதுகப்புறம் தான் ஆப்பு சரியா வைக்க முடியும்.

முத்து said...

Jey said...


ஹஹா ஹஹா ஹஹா, இதுகெல்லாம் அசந்தா தொழில் பண்ண முடியுமா பாஸ்?/////////


அதை தானே நானும் சொல்கிறேன்,சாமியார் என்பதையே இவனுக தொழிளாகிடான்களே என்று அதற்க்கு யார் காரணம்?

Jey said...

///யார் எக்கதியானால் என்ன? நம் கல்லா பெட்டி நிரம்பினால் போதும் என்று இருக்கும் அரசியல்வாதிகளா?///

கருத்துசொன்னா வீட்டுக்கு ஆட்டோல அடியாட்கள் அனுப்புவாங்களாம், நான் , நொம்பவும் பயந்தாங்கொல்லி.

முத்து said...

Jey said...

///எந்த தவறு செய்தாலும் மீண்டும் பழைய நிலையில் வந்து அமரவைத்த நம் அரசியல் சட்டமா? ///

அரசியல் சட்டத்தை யார் கிட்டயோ அடமானம் வச்சிட்டாங்களாம், மீட்டுனதுகப்புறம் தான் ஆப்பு சரியா வைக்க முடியும்.///////////


எவ்வளவுக்கு வைச்சு இருக்காங்கன்னு தெரியுமா

கவிதை காதலன் said...

தவறை மக்கள் மேல வெச்சுக்கிட்டு இந்த மாதிரி ஆட்களை குறை சொல்லி ஒண்ணும் பிரயோஜனமே இல்லை..

முத்து said...

Jey said...

///யார் எக்கதியானால் என்ன? நம் கல்லா பெட்டி நிரம்பினால் போதும் என்று இருக்கும் அரசியல்வாதிகளா?///

கருத்துசொன்னா வீட்டுக்கு ஆட்டோல அடியாட்கள் அனுப்புவாங்களாம், நான் , நொம்பவும் பயந்தாங்கொல்லி.////////////


இன்னும் எவ்வளவு நாள் தான் குட்ட குட்ட குனிய போறீங்க பாஸ்

Jey said...

///எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தப்பாமல் தப்பு தாளங்கள் போடும் அரசு அதிகாரிகளா?///

சம்பளம் பத்தலயாம், கூட்டி கொடுத்தா, ரோசனை பண்ரத சொல்றாங்களாம்.

//நம் மக்களை ஆட்டு மந்தைகளாய் வைத்து இருக்கும் அரசியல்வாதிகளின் முதுகு எலும்புகளான பணக்கார வர்க்கமா?///

கைப்புண்ணுக்கு கண்ணாடி.

///யார் எது பண்ணினாலும் உடனே மறந்து போகும் வியாதி கொண்ட நம் மக்களா?///

எவ்வளவு அடிச்சாலும் அலுக்காம வங்குர நல்லவங்கள நீயும் எதுக்கு முத்து அடிக்கிற?.

முத்து said...

கவிதை காதலன் said...

தவறை மக்கள் மேல வெச்சுக்கிட்டு இந்த மாதிரி ஆட்களை குறை சொல்லி ஒண்ணும் பிரயோஜனமே இல்லை..//////////

அதே தான் பாஸ் நானும் சொல்கிறேன்
கருத்துக்கு நன்றி

Jey said...

//எவ்வளவுக்கு வைச்சு இருக்காங்கன்னு தெரியுமா //
கொல்ல ரூவாயிக்குன்னு சொல்றாங்க, எனக்கு, 1 க்கு பினால 3 சைபருக்கு மேல போட்டா கணக்கு தெரியாது.

முத்து said...

Jey said...

///எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தப்பாமல் தப்பு தாளங்கள் போடும் அரசு அதிகாரிகளா?///

சம்பளம் பத்தலயாம், கூட்டி கொடுத்தா, ரோசனை பண்ரத சொல்றாங்களாம்.///////////////


அதுக்கு அவனுங்க வேற தொழில் பண்ணலாமே//நம் மக்களை ஆட்டு மந்தைகளாய் வைத்து இருக்கும் அரசியல்வாதிகளின் முதுகு எலும்புகளான பணக்கார வர்க்கமா?///

கைப்புண்ணுக்கு கண்ணாடி.//////

புண் புரையோடும் முன் சரி செய்ய வேண்டாமா?///யார் எது பண்ணினாலும் உடனே மறந்து போகும் வியாதி கொண்ட நம் மக்களா?///

எவ்வளவு அடிச்சாலும் அலுக்காம வங்குர நல்லவங்கள நீயும் எதுக்கு முத்து அடிக்கிற?./////////


நான் எங்கய்யா அடிக்கிறேன்,திருப்பி அடிங்கன்னு தானே சொல்லுறேன்

Jey said...

//இன்னும் எவ்வளவு நாள் தான் குட்ட குட்ட குனிய போறீங்க பாஸ்//

அப்பிடின்றயா.. ஓகே முத்து, சங்கத்த கூட்டு ரெண்டுல ஒன்னு பாத்துரலாம்.

முத்து said...

Jey said...

//எவ்வளவுக்கு வைச்சு இருக்காங்கன்னு தெரியுமா //
கொல்ல ரூவாயிக்குன்னு சொல்றாங்க, எனக்கு, 1 க்கு பினால 3 சைபருக்கு மேல போட்டா கணக்கு தெரியாது.///////////


நாம் எல்லாம் இப்படி இருப்பதால் தான் சைபர் என்று என்னன்னு தெரியாத ஆட்கள் 1 க்கு பின்னால் 10 சைபர் 20 சைபருன்னு சுருட்டுறாங்க

முத்து said...

Jey said...

//இன்னும் எவ்வளவு நாள் தான் குட்ட குட்ட குனிய போறீங்க பாஸ்//

அப்பிடின்றயா.. ஓகே முத்து, சங்கத்த கூட்டு ரெண்டுல ஒன்னு பாத்துரலாம்.//////////

முதலில் சங்க தலைவரை கூப்பிடு என்ன சொல்லுறாருன்னு பார்ப்போம்

Jey said...

/// முத்து said...
Jey said...


ஹஹா ஹஹா ஹஹா, இதுகெல்லாம் அசந்தா தொழில் பண்ண முடியுமா பாஸ்?/////////


அதை தானே நானும் சொல்கிறேன்,சாமியார் என்பதையே இவனுக தொழிளாகிடான்களே என்று அதற்க்கு யார் காரணம்? ///

படிச்ச, படிக்காத முட்டாள், நாதாரி பப்ளிக்தான்... படிக்காத பயபுள்ளனு காட்ர பாத்தியா?>

இவனுகள எப்படி திருத்துரதுன்னுதா கொல்லப் பேரு போராடுராங்கோ, ஆனாலும் முடியலையே, என்ன பண்ணலாம்?

பட்டாபட்டி.. said...

எப்ப, காவி வேட்டி கட்டினவனும், கரை வேட்டி கட்டினவனும், நிம்மதியா தொழில் பண்ண முடியலையோ..அன்னக்கு வருவான்யா இந்த பட்டாபட்டி..ஹி..ஹி

முத்து said...

Jey said...
படிச்ச, படிக்காத முட்டாள், நாதாரி பப்ளிக்தான்... படிக்காத பயபுள்ளனு காட்ர பாத்தியா?>/////////////


பப்ளிக்கில் உண்மையை போட்டு உடைசிட்டேயே பரட்டஇவனுகள எப்படி திருத்துரதுன்னுதா கொல்லப் பேரு போராடுராங்கோ, ஆனாலும் முடியலையே, என்ன பண்ணலாம்?//////


வா நானும் நீயும் சேர்ந்து ஒரு மடம் ஆரம்பிச்சு இவங்களை சரி செய்யலாம்

முத்து said...

பட்டாபட்டி.. said...

எப்ப, காவி வேட்டி கட்டினவனும், கரை வேட்டி கட்டினவனும், நிம்மதியா தொழில் பண்ண முடியலையோ..அன்னக்கு வருவான்யா இந்த பட்டாபட்டி..ஹி..ஹி//////////


இப்போ என்ன வழின்னு கேட்டா போகாத ஊருக்கு வழி சொல்லுற

முத்து said...

பட்டா,ஜெ எக்ஸ்ட்ரா ஒரு டிஸ்கி சேர்த்து இருக்கேன் பார்க்கவும்

பட்டாபட்டி.. said...

நித்திகிட்ட என்னமோ இருக்குயா..

நானும் அந்தாளுகூட சேரலாமா?..

ஏதாவது கிடைக்குமா?..

ஹி..ஹி

ILLUMINATI said...

காவி கட்டியவன் எல்லாம் புண்ணியவான்னும்,கரை வேட்டி கட்டினவன் எல்லாம் தலைவன்னும் நம்புற முட்டாள் மக்கள் இருக்குற வரை இவனுங்களுக்கு பிழைப்புக்கு பிரச்சினையே கிடையாது.

Jey said...

//
எனக்கு என்ன கவலை நான் ஏன் மற்றவரை நம்பி இருக்க வேண்டும்,நான் நல்லா தானே இருக்கிறேன்,பக்கத்துக்கு வீட்டில் நடப்பது பற்றி எனக்கு என்ன கவலை என்று இருந்தால் உன் முகத்திலும் சாணம் விழும் நேரம் மிக விரைவில்.///

அல்ரெடி சாணத்தை தெளிச்சிட்டானுவ மக்கா, அத வேர இப்பொ எதயோ ஊத்தி கழுவ வேண்டியிருக்கு...

Jey said...

//நித்தியானந்தா பேசி முடித்ததும் அவரது காலில் விழுந்து பயபக்தியுடன் ஆசி பெற்றார் மாளவிகா .///

என்ன மச்சி ட்ரைனிங், இடம் மாறுரையா...!!!!

Jey said...

///ILLUMINATI said...
காவி கட்டியவன் எல்லாம் புண்ணியவான்னும்,கரை வேட்டி கட்டினவன் எல்லாம் தலைவன்னும் நம்புற முட்டாள் மக்கள் இருக்குற வரை இவனுங்களுக்கு பிழைப்புக்கு பிரச்சினையே கிடையாது.//

யோவ் இலுமி நீ எப்ப வருவே, எப்ப போவேன்ற பட்டியல அனுப்புயா.

முத்து said...

ILLUMINATI said...

காவி கட்டியவன் எல்லாம் புண்ணியவான்னும்,கரை வேட்டி கட்டினவன் எல்லாம் தலைவன்னும் நம்புற முட்டாள் மக்கள் இருக்குற வரை இவனுங்களுக்கு பிழைப்புக்கு பிரச்சினையே கிடையாது.//////////////////////////


மக்கள் திருந்த ஏதாவது வழி இருக்கா?இலுமி

முத்து said...

Jey said...

///ILLUMINATI said...
காவி கட்டியவன் எல்லாம் புண்ணியவான்னும்,கரை வேட்டி கட்டினவன் எல்லாம் தலைவன்னும் நம்புற முட்டாள் மக்கள் இருக்குற வரை இவனுங்களுக்கு பிழைப்புக்கு பிரச்சினையே கிடையாது.//

யோவ் இலுமி நீ எப்ப வருவே, எப்ப போவேன்ற பட்டியல அனுப்புயா./////////////


தெரிஞ்சிகிட்டு வர வழியில் பாம் வைக்க போறியா

கக்கு - மாணிக்கம் said...

எல்லோரும் சொல்லியதும் சரிதான். ஆனால் வசதியாக நாம் நம்மை- மக்களை திட்டி தீர்ப்பதில் அமைதி அடைகிறோம். இந்த அவலங்களுக்கு எல்லாம் மூல காரணம் நமக்கு கிடைத்த வரம்பற்ற உரிமைகள் தான் , ஜனநாயகம் என்று பெயர் வைத்து பொய்யர்கள் மக்களை எப்படி பன்றி கூட்டங்களாக மாற்றி வைத்துள்ளனர் என்று ஏன் எவரும் புரிந்து கொள்ள வில்லை? எந்த கருமத்திற்கு இந்த போலி ஜன நாயகம்?

எல்லாம் ஆல்பவர்களுய்க்கும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்குமே. இந்த அமைப்பில் நித்தியானந்தர்களை,கல்கி அவதாரங்களை யாராலும் தடுக்க இயலாது.

காவி அணிந்த அரசியல் வாதிகள் இவர்கள். அரசியலில் ஒரு பிடாரி போனால் ஒரு நாதாரி வருகிறதே அதைப்போல.

இவர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். மக்களும் அவர்களை நாடுவார்கள்.மீடியாக்களும் கல்லா கட்ட வேண்டும் தானே.எதனை பேருக்கு கேவலம் "எங்கள் வீட்டில் இனி டி.வி. யே வேண்டாம் " என்று மறுத்து செயல் பட தெம்பு உள்ளது?? மற்றதெல்லாம் அப்புறம்..


--

முத்து said...

கக்கு நீங்க சொல்வது உண்மை தான்,இங்கு நான் மக்களை குறை சொல்லவில்லை,முதலில் திருந்துவது அவர்களாக தான் இருக்க வேண்டும் என்பதே என் கருத்து
உதாரணமாக நீங்கள் சொன்னதே எடுத்து கொள்ளவோம்
/// அரசியலில் ஒரு பிடாரி போனால் ஒரு நாதாரி வருகிறதே அதைப்போல./////////

எப்படி இன்னொரு நாதாரி உள்ளே வரலாம் அதை நம்மால் தடுக்கலாம் இல்லையா

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

அட விடுங்க பாசு.. அவனவன் கோடி கோடியாய் கொள்ளை அடித்தவன் எல்லாம் கூட்டம் சேர்த்து கோஷம் போட்டு கும்மி அடித்து தமிழ் நாட்டையே பந்தாடிக் கொண்டு இருப்பவர்களை எல்லாம் விட்டு விட்டு இந்த ஆளைப் பிடித்து இழுப்பதில் எந்த ஞ்யாயமும் இல்லை.. முதலில் நமது நாடும் மக்களும் அவர்களது நலனும் எதிர்காலமும் தான்.. பிறகு தான் பண்பாடும் குற்றச் சாட்டுகளும்.. அந்த ஆளின் சொற்பொழிவில் எந்த தவறான செய்திகளோ பிரச்சாரமோ இல்லை.. எல்லாம் நல்லவையே.. அவன் எப்படியோ இருந்து விட்டுப் போகட்டும்.. திருத்தப் பட வேண்டியவர்கள் பட்டியலில் நிறைய பேர் இருக்கிறார்கள் நண்பர்களே.. இவன் அடி பட்ட பாம்பு.. பாவம் விட்டு விடுங்கள்..(இதைச் சொல்வதனால் நான் அவனின் ஆதரவாளன் என்று நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல..)

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

அப்புறம்.. சிகப்பு நிறத்தில் வெள்ளை நிற எழுத்துகளைப் படிப்பதற்குச் சிரமமாக உள்ளது.. வேறு நிறத்துக்கு மாறினால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து..

sweatha said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)

மங்குனி அமைசர் said...

பட்டாபட்டி.. said...
நித்திகிட்ட என்னமோ இருக்குயா..

நானும் அந்தாளுகூட சேரலாமா?..

ஏதாவது கிடைக்குமா?..

ஹி..ஹி
///

aamaa pattaa , yetho irukku

Murali.R said...

விநாயக சதூர்த்தி வாழ்த்துக்கள்!! என் ப்ளாக் வந்து குறை, நிறை சொல்லுங்க

http://idhunammaviidu.blogspot.com/2010/09/blog-post.html

karthikkumar said...

வணக்கம் நண்பா புதிய பிளாக் ஒன்றை ஆரம்பித்துள்ளேன் தங்களின் வருகையையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்
http://muraimaman.blogspot.com/2010/10/blog-post.html
நன்றி

karthikkumar said...

என்னுடைய புதிய id நண்பா

 
Dear Diary Blogger Template