உங்ககிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா?


நண்பர்களே நேற்று சந்தோஷ்பக்கங்கள் இந்த பதிவை போட்டு இருந்தார் , "இந்த விஷயத்தை உங்களால் முடிந்தால் நாலு பேருக்கு பகிருங்க" அப்படின்னு கேட்டு இருந்தார் , ரொம்ப நல்ல விஷயம் எனவே நண்பர்களே உங்களால் முடிந்த அளவுக்கு அனைவரும் குறைந்த பட்சம் ஒரே ஒரு நாளாவது உங்கள் பிளாக்கில் இந்த பதிவை போடுங்க நிறைய பேருக்கு ரீச் ஆகும் . விருப்பமுள்ளவர்கள் அனைவரும் இந்த தொடர்பதிவை தொடரலாம் .

உங்க கிட்ட நீங்க உபயோகப்படுத்தாத பொருட்கள் ஆடைகள், பொம்மைகள் இருக்கா? அதை தூக்கி எறியவும் மனசு இல்லாமல் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிங்களா?

CTC - Chennai Trekking Club என்று ஒரு இயக்கம் இருக்கிறது.. நீங்க மேற் சொன்ன விஷயங்களை கொடுத்து யாருக்கேனும் உதவ விரும்பினால் இந்த சுட்டியில் (https://spreadsheets1.google.com/viewform?hl=en&formkey=dEU1d2gzVnNVVTBMR3Z2eGNiMS1RaVE6MQ#gid=0)
உள்ள Excel Formஜ நிரப்புங்கள். தன்னார்வலர் ஒருவர் உங்களை தொடர்பு கொண்டு உங்களை சந்தித்து அதை பெற்றுக்கொள்வார். இப்போதைக்கு இது சென்னையில் உள்ளவர்களுக்கு மட்டுமே.. உங்களால் நீங்க அளிக்க இருக்கும் பொருட்களை சென்னைக்கு அனுப்ப முடிந்தால் கூட தொடர்பு கொள்ளலாம்.

தயவு செய்து திரும்ப உபயோகப்படுத்தும் நிலையில் இருந்தால் மட்டும் குடுங்க.. கிழிந்த துணிகளை எல்லாம் குடுக்காதிங்க பிளீஸ்...!

இந்த விஷயத்தை உங்களால் முடிந்தால் நாலு பேருக்கு பகிருங்க.

(நன்றி :சந்தோஷ்பக்கங்கள், மங்குனி அமைச்சர் பன்னிகுட்டி ராம்சாமி பனங்காட்டு நரி)

7 comments:

பருப்பு (a) Phantom Mohan said...

பல வருசம் கழிச்சு பதிவு போட்டாலும் தரமான பதிவத்தான்யா போட்டிருக்க.

நல்ல விசயம்.

மொள்ளமாரித்தனம், முடிச்சவிக்கித்தனம், தெள்ளவாரித்தனம் பண்றவன் எல்லாம், கொஞ்சமாது புண்ணியம் தேட உதவி பண்ணுங்க.

இந்தியாவில் இருக்கும் நண்பர்களிடம் சொல்லி என் பங்கு உதவியை செய்கிறேன்.

முத்து said...

பல வருசம் கழிச்சு பதிவு போட்டாலும் தரமான பதிவத்தான்யா போட்டிருக்க.

நல்ல விசயம்.

மொள்ளமாரித்தனம், முடிச்சவிக்கித்தனம், தெள்ளவாரித்தனம் பண்றவன் எல்லாம், கொஞ்சமாது புண்ணியம் தேட உதவி பண்ணுங்க.

இந்தியாவில் இருக்கும் நண்பர்களிடம் சொல்லி என் பங்கு உதவியை செய்கிறேன்.///////////////


நான் எங்க பதிவ போட்டேன் இதுவும் காப்பி பேஸ்ட் தான்

முத்து said...

இந்தியாவில் இருக்கும் நண்பர்களிடம் சொல்லி என் பங்கு உதவியை செய்கிறேன்.///////////

இதையாவது ஒழுங்கா செய்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடப்பாவி, முத்துபயலும் திருந்திட்டான்பா! பேஷ் பேஷ்!

நல்ல விஷயம்னா எல்லாம் ஒன்னுகூடிறாஙுங்கய்யா! இப்பிடித்தான்யா எப்பவும் இருக்கனும்!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஆள் இருந்தா சரி...

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடப்பாவி, முத்துபயலும் திருந்திட்டான்பா! பேஷ் பேஷ்!

நல்ல விஷயம்னா எல்லாம் ஒன்னுகூடிறாஙுங்கய்யா! இப்பிடித்தான்யா எப்பவும் இருக்கனும்!////////////////////

அத நீ சொல்லுற பார்த்தியா அத நினைச்சா .............

முத்து said...

பட்டாபட்டி.. said...

ஆள் இருந்தா சரி.../////


ஹலோ போலீஸ் ஸ்டேஷன்னா பிரபல பதிவர் பட்டாப்பட்டி காணவில்லை அப்படின்னு ஒரு கம்ப்ளைன்ட் பண்ணனும் சார்

 
Dear Diary Blogger Template